சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி குழு புத்தகங்களை பயன்படுத்தக் கோரிய மனுவை, நான்கு வாரங்களில் பரிசீலித்து, முடிவெடுக்கும்படி, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் புருஷோத்தமன், தாக்கல் செய்த மனு:கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆரம்ப நிலையில் உள்ளகுழந்தைகளுக்கு, மூன்றுஅல்லது நான்கு பாடங்கள்கற்பிக்கப்படுகின்றன.இந்த குழந்தைகளுக்கு,
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 6ம் வகுப்பில் இருந்து, வெவ்வேறு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.தனியார் வெளியீட்டு நிறுவனங்களின் புத்தகங்களை, தனியார் பள்ளி களில் அனுமதிப்பது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்துக்கு மனு
அனுப்பினேன்.அதற்கு, ௨௦௧௭ ஜன., முதல், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டும் வாங்க, தனியார்,சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அறிவுறுத்திஇருப்பதாக, பதில்அளிக்கப்பட்டது.என்.சி.இ.ஆர்.டி., நிர்ணயித்த பாடங்களைமட்டுமே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பயிற்றுவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தனியார் வெளியீட்டு நிறுவனங்களின் புத்தகங்களை வாங்கும்படி, பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை, ரத்து செய்ய வேண்டும். என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை வாங்கும்படி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி கிருபாகரன்முன், விசாரணைக்குவந்தது. மூன்று வயதிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, அவர்களின் குழந்தை பருவத்தை பாழாக்குவதாக, நீதிபதி வேதனை
தெரிவித்தார்.என்.சி.இ.ஆர்.டி.,புத்தகங்களை பயன்படுத்தக் கோரிய மனுவை, நான்கு வாரங்களில்பரிசீலித்து, முடிவெடுக்கும்படி, மத்தியஅரசுக்கும், சி.பி.எஸ்.இ.,க்கும், நீதிபதிஉத்தரவிட்டார்.மனு குறித்து, மத்திய அரசு, உதவி சொலிசிட்டர் ஜெனரல், சீனிவாசன் பதிலளிக்கும்படி
உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி தள்ளி வைத்தார்.
No comments:
Post a Comment