இணைக்கப்பட்ட 6 வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30க்குப் பின் செல்லாது: எஸ்பிஐ அறிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 21, 2017

இணைக்கப்பட்ட 6 வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30க்குப் பின் செல்லாது: எஸ்பிஐ அறிவிப்பு.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் இணைந்த 6 துணை வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த 6 வங்கிக் கிளைகளிலும் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்திய பினான்சியல் சிஸ்டம் (IFS) கோட் கொண்ட புதிய காசோலைப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

பாரதிய மகிலா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் காசோலைகள் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்பதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இதில்லாமல், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ராய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப்  திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய ஆறு வங்கிகளின் கிளைகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் புதிய காசோலைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆறு வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து விட்டதால், வங்கிகளின் பழைய காசோலைகளும், அதன் ஐஎஃப்எஸ் கோட் எண்களும் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment