கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) - மாணவர் அடையாள அட்டை தயாரித்தல் - வழிகாட்டுதல்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 2, 2019

கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) - மாணவர் அடையாள அட்டை தயாரித்தல் - வழிகாட்டுதல்கள்

கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) - மாணவர் அடையாள அட்டை தயாரித்தல் - வழிகாட்டுதல்கள்

கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)- மாணவர் அடையாள அட்டை தயாரித்தல்  -வழிகாட்டுதல்கள்
 இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இயக்குனரின் செயல்முறைக்கடித்தில் கண்டுள்ள  வழிகாட்டுதல்களின்படி, செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 🔴 மேலும் வரும் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறும் என அறியப்படுவதால் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ள 9 இனங்களை அந்தந்த வகுப்பாசிரியர்கள் அவர்களின் வகுப்பு மாணவர்களின் விவரம் சரியாக உள்ளது என்பதை பள்ளியிலுள்ள ஆவணங்கள் கொண்டு உறுதி செய்ய வேண்டும்.
🔴 தவறுகளை சரி செய்து, சரியானதை  உள்ளீடு செய்ய வகுப்பு ஆசிரியர் களுக்கு அறிவுறுத்தி, இப்பணியை 08.04.2019 க்குள் முடித்திட, அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 🔴 தற்போது Emis இணையதளத்தில் மாணவர்களின் முன்னால் உள்ள மாணவர்களின் Id எண்ணை click செய்தால்  ஒன்பது இனங்களை மிகச் சுலபமாக திருத்த முடியும்.
🔴🔴 மாணவரின் விவரங்களை மாற்ற / திருத்த வேண்டிய இடம்
Student  profile
📍மாணவர் பெயர் தமிழில்
📍மாணவர் பெயர் ஆங்கிலத்தில்
📍பெற்றோர் பெயர் ஆங்கிலத்தில்
📍பிறந்த தேதி
📍ரத்த வகை
📍தொடர்பு எண்
📍வீட்டு முகவரி
📍புகைப்படம் ..
🔴🔴 பள்ளி முகவரி மாற்ற / திருத்த வேண்டிய இடம்
School profile
🔴 புகைப்படங்கள்  பொறுத்தமட்டில் ஏற்கனவே இருப்பவை மாற்றவும் புதியவற்றை சேர்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 🔴 மேற்கண்ட இனங்களை போல் Emis இணையதளத்தில் உள்ள உங்கள் பள்ளி சார்ந்த அனைத்து தகவல்களும் மிகச்சரியாக இருத்தல் வேண்டும்.
ஏனெனில் , வரும் கல்வி ஆண்டுமுதல் EMIS தளத்தில் இருந்துதான் அரசின் அனைத்து
🔴 பள்ளி சார் பதிவேடுகளின் பதிவுகள்  மற்றும் நடவடிக்கைகள்
 🔴 மாணவர்களின் நலத்திட்டங்கள்
🔴 ஆசிரியர் பணியிடங்கள் வருவித்தல் மற்றும்
உபரி பணியிடங்கள் கணக்கிடுதல்
 சார்ந்த அனைத்து விவரங்களும்   தொகுக்கப்பட உள்ளன.
 🔴 இவ்வினங்களில்  ஏதேனும் பிழைகள் அல்லது தவறுகள் இருப்பின் தற்போதே அனைத்தையும் சரி செய்து கொள்ள வேண்டும்.
(  திருத்தம் குறித்த வீடியோ முன்னதாக அனுப்பப்பட்டுள்ளது)
🔴 பிழைகள் திருத்தப்படவில்லை என்றால்,  சார்ந்த   பள்ளியே அதற்கு பொறுப்பாகும்.
🔴 தொழில்நுட்ப விவரங்கள் சார்ந்த ஐயங்களுக்கு வட்டார அளவிளான EMIS குழுவை அணுகி தீர்வு பெறலாம்.
🔴 மாணவர் அடையாள அட்டை சார்ந்த விவரங்கள் நூறு சதவீதம் பிழையின்றி  அச்சிடப்பட வேண்டும் என்பதால்,  விவரங்களை ஆவணங்கள் அடிப்படையில் சரிபார்த்து திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது.
 இதுவே திருத்தங்கள் செய்ய இறுதி வாய்ப்பு

ID card corrections urgent
 ( before 08.04.2019)
Emis over all correction compulsory
( before 08.04.2019)

No comments:

Post a Comment