சென்னையில் அடுத்தடுத்து தாக்கப்படும் ஆசிரியர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 4, 2014

சென்னையில் அடுத்தடுத்து தாக்கப்படும் ஆசிரியர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு மதுரவாயலில் ஆசிரியை ஒருவரை மாணவர் அறைந்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள லயோலா மெட்ரிகுலேஷன் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருப்பவர் பாஸ்கரன். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடம் எடுக்கையில் வகுப்பறையில் சேட்டை செய்த மாணவன் அர்னால்டை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர் பாதியிலேயே பள்ளியில் இருந்து வீட்டுக்கு கிளம்பினார். சிறிது நேரத்தில் ஒரு கும்பல் பள்ளிக்குள் புகுந்து பாஸ்கரனை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments:

Post a Comment