குழந்தை தொழிலாளர் மாணவர்களுக்கு வங்கிக்கணக்கில் நேரடி உதவித்தொகை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 8, 2015

குழந்தை தொழிலாளர் மாணவர்களுக்கு வங்கிக்கணக்கில் நேரடி உதவித்தொகை

தமிழகத்தில் விருதுநகர், கோவை உள்ளிட்ட 15 மாவட்ட குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கிலேயே மாத உதவித்தொகை செலுத்தும் புதிய திட்டத்தை மத்திய அரசு துவங்க உள்ளது.

         செங்கல்சூளை, கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தீப்பெட்டி ஆலைகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் ஒன்பது முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு தேசிய
குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை கற்றுத்தரப்படுகிறது.

வறுமையால் பள்ளிப்படிப்பை இடையில் கைவிட்டோரும் இதில் அடங்குவர். அவர்களுக்கு மாதம் ரூ.150 ரூபாய் உதவித்தொகையை நேரடியாக அவர்கள் வங்கிக்கணக்கில் மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் செலுத்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.

விருதுநகர் மாவட்ட தேசியகுழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் நாராயணசாமி,‘ இம்மாணவர்களுக்கு பொதுத்துறை வங்கியில் நாங்கள் கணக்கு துவங்கி தந்து தற்போது அதன்மூலம் உதவித்தொகை வழங்கிவருகிறோம்.

No comments:

Post a Comment