பார்வையற்றோர் ,வாய் பேசமுடியாதவர்கள் ,காது கேளாதவர்களுக்கு அறிய வாய்ப்பு ,படிப்பு தங்குமிட செலவு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது,இதை அறிந்தவர்கள் பகிர்ந்து மற்றவருக்கு உதவுங்கள் ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 4, 2015

பார்வையற்றோர் ,வாய் பேசமுடியாதவர்கள் ,காது கேளாதவர்களுக்கு அறிய வாய்ப்பு ,படிப்பு தங்குமிட செலவு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது,இதை அறிந்தவர்கள் பகிர்ந்து மற்றவருக்கு உதவுங்கள் !


மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுவாழ்வு. புதுக்கோட்டையில் இயங்கிவரும்பயிலகமானது பார்வையற்றோர், காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோர்க்கு ஒரு சிறப்பான பயிலகம். இப்பயிலகம் 20 ஆண்டுகளாய் நடைபெற்று வருகிறது. தற்போது புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 15 வயதுக்கு மேற்பட்டவர்களை இப்பயிலகத்துக்கு அனுப்பிவைத்து அல்லது அழைத்து வந்து சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இங்கு இலவசமாக அளிக்கப்படும் பயிற்சிகள்: 1. 8th, 10th, 12th வகுப்புகள் தனிப்பயிற்சி அளித்து அரசு தேர்வுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். 2.அஞ்சல் வழியாய் பட்டப்படிப்பு படிக்கலாம் 3.பார்வையற்றோருக்கு பிரெயில் எழுத படிக்க கற்றுக்கொடுக்கப்படுகிறது. 4. காதுகேளாதோர்க்கு சைகை மொழியும், சைகை மொழியில் தையல் பயிற்சியும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. 5. பார்வையற்றோருக்கு கணினி பயிற்சியும், தட்டச்சு பயிற்சியும், கற்றுக்கொடுக்கப்படுகிறது.(talking software மூலம்) 6. 4 ஆண்டுகள் படித்து முடித்தபின் பட்டைய சான்றிதழும் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. 7.உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். 8. அரசு போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தேர்வு எழுத அனுப்பப்படுகின்றனர். அரசு வேலைக்கு உத்ரவாதம் அநேகர் இங்கு பயிற்சி பெற்று தற்போது அரசு வேலையில் உள்ளனர். 9. காதுகேளாதோர்க்கு welding, two wheeler mechanic தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, தொலைபேசியில் அணுகவும். நெல்சன்- 9865204181 , எலிசபெத் சண்முகம்- 9543160197 , பரமசிவம்- 8675848487 . இந்த நற்செய்தியை forward செய்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மலர உதவுங்கள்

No comments:

Post a Comment