தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் விவரங்களை சேகரிக்க, நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர்களிடம், அவர்களின் ஆதார் எண், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
தமிழகத்தில், 5.62 கோடி வாக்காளர் உள்ளனர். இதுவரை, 2 கோடி வாக்காளர்களிடம் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில், 35 லட்சம் வாக்காளர்களின் பெயர், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள், வீடுகளுக்கு வரும்போது
வீட்டில் இல்லாதவர்கள் வசதிக்காக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாம், காலை, 10:00 மணியில் இருந்து மாலை, 5:30 மணி வரை நடைபெறும். முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம். 'முகாமிற்கு வருவோர், ஆதார் அட்டை நகலை எடுத்து வர வேண்டும்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
No comments:
Post a Comment