வேலூர் மாவட்டத்தில் 15–ந் தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 13, 2015

வேலூர் மாவட்டத்தில் 15–ந் தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் 15–ந் தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு-வேலூர் கலெக்டர் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற கெங்கையம்மன் திருக்கோவில் சிரசு ஊர்வல திருவிழா வருகிற 15–ந்தேதி வெள்ளிக்கிழமை நடைப்பெற உள்ளது.பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வசதியாக, குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு ஊர்வல திருவிழா நடைபெறும். அன்று, அரசு அலுவலர்களுக்கான வேலை நாளான 15–ந்தேதி வெள்ளிக்கிழமை வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.அதற்கு பதிலாக ஜீன் 13–ந்தேதி சனிக்கிழமை அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாகவும், அரசு விடுமுறை நாளான ஜீன் 14–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அச்சக பணியாளர்களுக்கு வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.இந்த உள்ளூர் விடுமுறை நாட்கள் செலவாணி முறைசட்டம், 1881 கீழ் வராது என்பதால் கருவூலகங்களும், சார்நிலை கருவூலகங்களும் அரசு பாதுகாப்புக்கான அரசு அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment