3 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று தற்காலிக ரத்து: அவசரகால கதவு, தீயணைப்புக் கருவி குறைபாடு இருந்ததால் நடவடிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 16, 2015

3 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று தற்காலிக ரத்து: அவசரகால கதவு, தீயணைப்புக் கருவி குறைபாடு இருந்ததால் நடவடிக்கை

சென்னை அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலக (ஆர்டிஓ) எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளின் வாகனங்கள் ஆவடியில் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. அப்போது அவசரகால கதவு, தீயணைப்புக் கருவியில் குறைபாடு இருந்த வாகனங்களுக்கு தகுதிச் சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி மே 11-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரையில் நடக்கவுள்ளது. அண்ணாநகர் ஆர்டிஓ எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்களின் ஆய்வு ஆவடியில் நேற்று நடத்தப்பட்டது. இதில், கல்வித்துறை அதிகாரி ராஜகோபால், வருவாய்த்துறை அதிகாரி தாட்சாயணி, அண்ணாநகர் காவல்துறை உதவி ஆணையர் சந்திர சேகரன், அண்ணாநகர் வட்டார போக்கு வரத்து அலுவலர் இரா.சுந்தரேசன் மற்றும் வாகன ஆய்வாளர் கள் கண்ணன், பாரிவேந்தன், திருநாவுக்கரசு, இளங்கோ ஆகியோர் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக வட்டார போக்கு வரத்து அலுவலர் சுந்தரேசன் கூறும் போது, ‘‘எங்கள் எல்லைக்கு உட்பட்ட 20 பள்ளிகளுக்கு சொந்தமான 100 வாகனங்களில் நேற்று 40 வாகனங்களில் ஆய்வு நடத்தப் பட்டது. இதில், 3 வாகனங்களில் அவசரகால கதவுகள் இயங்காத நிலை, தீயணைப்புக் கருவி யில் குறைபாடு இருப்பது கண்டறியப் பட்டது. இந்த வாகனங் களுக்கு தகுதிச்சான்று (எப்சி) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக னங்களில் அடுத்த வாரத்தில் ஆய்வு நடத்தவுள்ளோம்’’ என்றார்.

No comments:

Post a Comment