பி.இ. சேர்க்கை: முதல் நாளில் 56,685 விண்ணப்பங்கள் விநியோகம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 8, 2015

பி.இ. சேர்க்கை: முதல் நாளில் 56,685 விண்ணப்பங்கள் விநியோகம்

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் முதல் நாளில் 56 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பி.இ. கலந்தாய்வு விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விநியோக மையங்களில் முதல் நாளில் மாணவர்களும், பெற்றோரும் விண்ணப்பங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மாலை 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 60 மையங்களில் 56,685
விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நாளில் 69,925 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment