தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய செயலாளராக பணியாற்றும் எம்.ஆசியா மரியம் நகராட்சி நிர்வாக துணை ஆணையராகவும், சென்னை மாநகராட்சியில் மாவட்ட வருவாய் அதிகாரியாக (தேர்தல்கள்) பணியாற்றும் எஸ்.செந்தாமரை வேளாண்துறை கூடுதல் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் கூடுதல் இயக்குனர் எஸ்.நடராஜன் ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனராகவும், பொது (தேர்தல்கள்) இணை தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றும் எஸ்.சிவஞானம் அதே பதவியில் உயர் நிலையிலும் நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (சுகாதாரம்) பணியாற்றும் டி.ஆனந்த் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராகவும், சென்னை மாநகராட்சியில் மாவட்ட வருவாய் அதிகாரியாக (நிலம் மற்றும் எஸ்டேட்கள்) பணியாற்றும் ஆர்.கண்ணன் துணை ஆணையர் (சுகாதாரம்) நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் கழக பொதுமேலாளராக பணியாற்றும் எல்.நிர்மல்ராஜ் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குனராகவும், சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரியாக பணியாற்றும் ஏ.அண்ணாதுரை மண்டல துணை ஆணையராகவும் (தெற்கு) நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை மாநகராட்சியில் மண்டல துணை ஆணையராக (தெற்கு) பணியாற்றும் டாக்டர் ஆர்.ஆனந்தகுமார் தமிழ்நாடு நீர்வடி மேம்பாட்டு முகமை செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
No comments:
Post a Comment