திறந்தநிலை பல்கலை.யில் இணையவழி படிப்புகள் தொடக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 8, 2015

திறந்தநிலை பல்கலை.யில் இணையவழி படிப்புகள் தொடக்கம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இணைய வழி பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் புதிய இணைய வழி படிப்பு முறையைத் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இணைய வழி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மும்பையைச் சேர்ந்த "ஸ்கூல்குரு எடுசர்வ்' தனியார் நிறுவனத்துடன் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. முதல் கட்டமாக 27 வகையான
இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் இணைய வழியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் புதிய முறையில் சேரும் மாணவர்கள் இணைய வழியிலேயே சேர்க்கையையும், புத்தகங்கள் பதிவிறக்கத்தையும் வீட்டிலிருந்தபடியே செய்து கொள்ளலாம். அதோடு, தலைசிறந்த ஆசிரியர்களின் விடியோ வகுப்புகள், உரையாடல்கள், பாடங்களையும் செல்லிடப்பேசியிலேயே மாணவர்கள் பார்க்கலாம். இவை அனைத்தும் மெமரி கார்டில் (மைக்ரோ ஹெச்.டி. கார்டு) கொடுக்கப்படுவதால், இணைய இணைப்பும் தேவையில்லை. அதோடு, இணையதளம் மூலமாக பேராசிரியர்கள், பிற மாணவர்களுடன் கல்வி தொடர்பாக உரையாடும் வசதியும் இந்த முறையில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களைப் பெற "TNOU" என 56767 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால் போதுமானது. அல்லது www.tnouonline.ac.in என்ற இணையதளத்தையோ, 7810003388 என்ற செல்லிடப் பேசியையோ மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment