நர்சரி பள்ளி கூட்டமைப்பு அறிவிப்பு : ஏழை குழந்தைகளுக்கு இந்தாண்டு சீட் இல்லை- - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, May 10, 2015

நர்சரி பள்ளி கூட்டமைப்பு அறிவிப்பு : ஏழை குழந்தைகளுக்கு இந்தாண்டு சீட் இல்லை-

நர்சரி பள்ளி கூட்டமைப்பு அறிவிப்பு : ஏழை குழந்தைகளுக்கு இந்தாண்டு சீட் இல்லை-இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் நடப்பு கல்வியாண்டில் சேர்க்கை நடைபெறாது என்று தமிழ்நாடு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தஞ்சையில் தமிழ்நாடு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பிலோமின்ராஜ் தலைமை வகித்தார். தமிழகத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த 10,000க்கும் அதிகமான மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பள்ளிக்கும் தமிழக அரசால் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு 2013- 14 மற்றும் 2014- 15 ஆகிய கல்வியாண்டில் 50,000க்கும் அதிகமான குழந்தைகள் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.

கடந்த 2 கல்வியாண்டுகளுக்கும் தமிழகத்தில் உள்ள மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை குழந்தைகள் இலவசமாக பள்ளியில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசால் கல்வி கட்டணம் அந்தந்த பள்ளிகளுக்கு கொடுக்கவில்லை. எனவே எல்லா பள்ளிகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த கல்வியாண்டுக்கு (2015-2016) தமிழகத்தில் உள்ள மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் இந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெறாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment