வைப்பு தொகையை திருப்பி தராததால், தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.
மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலை, கே.பி.அவென்யூவில் தனியார் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது.
சேர்க்கையின்போது, குழந்தைகளின் பெற்றோரிடம் இருந்து, 25 ஆயிரம் ரூபாய் வைப்பு தொகை பெறப்பட்டதாக கூறப்படுகிறது. பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் வாங்கி செல்லும்போது, பணம் திருப்பி தரப்பட வேண்டும்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மாற்று சான்றிதழ் வாங்கி சென்றுள்ளனர். அவர்களுக்கு வைப்பு தொகை திருப்பி தரப்படவில்லை என கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் சமரசம் பேசினர். பின் அவர்கள் பள்ளி நிர்வாகம் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
குடியிருப்போர் நல சங்கத்தினர் கூறியதாவது: பள்ளியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. விபத்துகள் ஏற்பட்டால், வெளியேற அவசர வழிகளோ, விளையாட்டு மைதானமோ இல்லை. குடியிருப்போர் நலச்சங்கங்கள் சார்பில், வழக்கு தொடரப்பட்டு, பள்ளியை மாற்றி அமைக்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment