ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை மே மாதம் நடத்தவேண்டும்என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி கழகம் வலியுறுத்தி உள்ளது.தேனி மாவட்ட தலைவர் சின்னராஜா கூறியதாவது:
ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து பிரிவு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு மே மாதம் கவுன்சிலிங் நடத்தப்படவேண்டும். கவுன்சிலிங் ஒளிவுமறைவின்றி நடத்தப்பட வேண்டும். அதேபோல் உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகளின் விபரத்தையும் மே மாதமே அறிவிக்கவேண்டும்.
இதன் மூலம் மாணவர்களுக்கு சிரமம் குறையும். கூடுதல் வசதிகள் கிடைக்கும், என்றார்.
No comments:
Post a Comment