மாணவர்களுக்கு ஆலோசனை மையம் : கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., உத்தரவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 12, 2015

மாணவர்களுக்கு ஆலோசனை மையம் : கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., உத்தரவு.

மாணவர்களுக்கு, தனி ஆலோசனை மையம் அமைக்க வேண்டும்' என, அனைத்து மத்திய பல்கலைக் கழகங்கள், கல்லுாரிகளுக்கு, பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டு உள்ளது. அதன் விவரம்: அனைத்து உயர்கல்வி மையங்களிலும், மாணவர்களுக்கான ஆலோசனை மையங்கள் அமைக்க வேண்டும். இதில், மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், தேர்வு பயம், வீட்டு கவலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கும், ஆலோசகரை நியமிக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகிய முத்தரப்பினரிடையே, பிரச்னைகளுக்கு தீர்வளிக்கக் கூடிய பாலமாக,
ஆலோசகர் செயலாற்றுவது அவசியம். செயல்பாடுகுறைந்தபட்சம், ஒரு ஆலோசகர், 25 மாணவர்களுடன் தொடர்பு கொண்டு, பயனுள்ள ஆலோசனைகளை வழங்குவதுடன், மாணவர்களின் செயல்பாடு, கல்லுாரி வருகை, தேர்வு முடிவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும், பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். கல்லுாரி விடுதி காப்பாளருடனும், ஆலோசகர் தொடர்பு கொண்டு, மாணவர்களின் நட வடிக்கைகளை அறிந்து, அதற்கேற்ற செயல்திட்டங்களை வகுத்துக் கொள்வது அவசியம். கல்லுாரியில், சிலசமயம் ஏற்படும் தேவையற்ற பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண, கல்லுாரி வளாகத்தில் தனி காவல் நிலையம் அமைக்கலாம். மாணவர்களின் செயல்பாடுகள் அல்லது அவர்கள் தொடர்பான அவசர செய்திகளை இணையம், மொபைல் போன் போன்றவற்றின் மூலம், பெற்றோருக்கு தெரிவிக்கும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். விதிமுறைகள்உயர்கல்வி மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, யு.ஜி.சி., வகுத்துள்ள இந்த வழிகாட்டு விதிமுறைகளை, அனைத்து உயர்கல்வி மையங்களும் கடைபிடிக்க வேண்டும்.இந்த விதிமுறைகளை, கல்வி மையங்கள், அவற்றின் நடைமுறை விதிகளுடன் சேர்க்க வேண்டும். இவ்வாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment