பேஸ்புக்கின் புதிய தேடல் பொறி செயலியால் கூகுலுக்கு ஆபத்து? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 11, 2015

பேஸ்புக்கின் புதிய தேடல் பொறி செயலியால் கூகுலுக்கு ஆபத்து?

புதிதாக பேஸ்புக் அறிமுகப்படுத்தியிருக்கும் தேடல் பொறி செயலியால், தற்போது அத்துறையில் கோலோச்சிவரும் கூகுள் நிறுவனம் கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த சிலரின் பேஸ்புக் பக்கத்தில், அட்-போட்டோ எனும் பட்டனுக்கு பக்கத்தில் புதிதாக அட்-லிங் எனும் புதிய வசதி தோன்றியுள்ளது. இந்த புதிய வசதி மூலம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தேடும் போது, அது தொடர்பான இணைதள லிங்குகள் கிடைக்கும். அவற்றை நேரடியாக பேஸ்புக்கின் ஸெட்டஸ் பதிவிடும் பகுதியில் பகிர்ந்துகொள்ள முடியும்.

இதற்கு முன் ஒரு லிங்கை தேடி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் கூகுள் தேடு பொறிக்கு தான் செல்லவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக்கின் இந்த புதிய வசதி முழுமையான பயன்பாட்டிற்கு வந்து, கோடிக்கான பேஸ்புக் பயனாளர்கள் இதை பயன்படுத்த ஆரம்பித்தால் கூகுலின் விளம்பர வருவாய் கடுமையாக பாதிக்கப்படும் என அத்துறை நிபுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 70 சதவீத வருவாயை மொபைல் விளம்பரம் மூலம் பெற்றுவரும் பேஸ்புக்கின் வருமானம் இதன் மூலம் பலமடங்கு அதிகரிக்கும்.

No comments:

Post a Comment