சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தலைவர் பாலசுப்பிரமணியம் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு பணியாளர் ேதர்வாணையம் சார்பில் இந்து சமயம் அறநிலைய ஆட்சித் துறை யில் அடங்கிய செயல் அலுவலர் (கிரேடு4 ) பணியில் காலியான 23 இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை 2013 நவம்பர் 16ம் தேதி நடத்தியது. இத்தேர்வை 20,433 பேர் எழுதினர். இவர்களுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதில் 49 பேர் நேர்முக தேர்வுக்கு(இன்டர்வியூ) அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 23ம் தேதி நடைபெறும். மேலும், கால்நடை பராமரிப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய புள்ளியல் ஆய்வாளர் பணியில் 6 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் 1,623 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கான ரிசல்ட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நேர்முக தேர்வுக்கு 18 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 24ம் தேதி நடைபெறும்.
அதேபோல் அரசு எழுது பொருள் மற்றும் அச்சுப்பணியில் அடங்கிய உதவி பணி மேலாளர் பணியில் 8 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 11ல் நடத்தப்பட்டது. இத்தேர்வை 432 ேபர் எழுதியிருந்தனர். இவர்களுக்கான ரிசல்ட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 22 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேர்முக தேர்வு 24ம் தேதி தொடங்கும். நேர்முக தேர்வு பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலத்தில் நடைபெறும். விண்ணப்பதாரர்களுக்கான அழைப்பானை விரைவு அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அழைப்பு கடிதத் தினை தேர்வாணைய இணையதளம்(www.tnpsc.gov.in) டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாளில் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வில் பங் கேற்க தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது. தேர்வுக்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் தேர்வு செய்யப்பட முழு தகுதி பெற உறுதி அளிக்கப்பட்டதாக கருத இயலாது. இவ்வாறு பாலசுப்பிரமணியம் கூறினார். டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் ஒரே நாளில் 3 தேர்வு முடிவுகளை வெளியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் 4 தேர்வுக்கு நாளை மறுநாள் சான்றிதழ் சரிபார்ப்பு
குரூப் 4 பதவியில் 4,963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் 21ம் தேதி நடந்தது. இதில் 10,02,080 தேர்வாளர்களின் மதிப்பெண், தரவரிசை நிலை அண்மையில் வெளியிடப்பட்டது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நாளை மறுநாள் சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் தொடங்குகிறது. யார், யாருக்கு எந்த நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்ற முழு விவரம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment