பார்வையற்ற மாணவியருக்கு 'அட்மிஷன்' : அரசு உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 12, 2015

பார்வையற்ற மாணவியருக்கு 'அட்மிஷன்' : அரசு உத்தரவு

பெற்றோரின் கோரிக்கையை ஏற்று பார்வையற்ற ஏழு மாணவியரை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இருபாலர் பயிலும் இப்பள்ளியில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற ஏழு மாணவியரை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க மறுத்துவிட்டனர்.அரசு உத்தரவை காரணம் காட்டி பள்ளி தலைமை ஆசிரியர் பார்வையற்ற மாணவியரை திருப்பி அனுப்பினார்.
இதனால் அதிருப்தியடைந்த மாணவியரின் பெற்றோர்மற்றும் மாற்றுத் திறனாளி சங்க நிர்வாகிகள் முதல்வர் மற்றும் மாற்றுத் திறனாளி நலத்துறையிடம் முறையிட்டனர்.இதையடுத்து அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் பார்வையற்ற ஏழு மாணவியரையும் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment