ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிட கோரிக்கை. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 11, 2015

ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிட கோரிக்கை.

ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வு முடிவின் போது மதிப்பெண்களையும்வெளியிட ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மையம் சார்பில் கல்வித்துறைக்கு கோரிக்கையில், அரசு பள்ளிகளில்காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த மே.31ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. சுமார் எட்டரை இலட்ச் பேர் இத்தேர்வை எதிர்கொண்டனர்.
எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிடும்போது மாணவ,மாணவியர்களின் மதிப்பெண்களையும் சேர்த்து வெளியிட கல்வித்துறை பரிசீலனை செய்ய வேண்டும். தற்போது குரூப் தேர்வு முடிவுகளின் போது டிஎன்பிஎஸ்சி., தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை சேர்த்து வெளியிட்டு வருகிறது. அதே முறையை கல்வித்துறை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment