இலவச புத்தக வாகன வாடகை உயர்வு:தலைமை ஆசிரியர்கள் குழப்பம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 8, 2015

இலவச புத்தக வாகன வாடகை உயர்வு:தலைமை ஆசிரியர்கள் குழப்பம்

இலவச பாடப்புத்தகங்களை ஏற்றி வரும் செலவு, கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால், அவற்றை எப்படி ஈடுகட்டுவது என,” தலைமை ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், விலையில்லா புத்தகம், நோட்டு, புத்தகபை, காலணி, கணித உபகரண பெட்டி, கிரையான் உள்ளிட்ட 14 பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை 'சம்பந்தப்பட்ட ஸ்டோர் பாயிண்ட்' எனப்படும், அலுவலகங்களிலிருந்து, பள்ளிகளுக்கு எடுத்து வருகின்றனர்.

          மேல்நிலை பள்ளிகளை பொறுத்தவரை, மாவட்ட தலைநகரில் இருந்தும், பிற வகுப்பு புத்தகங்கள், கல்வி மாவட்ட அலுவலகங்களிலிருந்தும், துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கு, ஒன்றிய தலைநகரங்களிலிருந்து எடுத்து வர வேண்டியதுள்ளது. விலையில்லா பொருட்கள் ஒரே முறையில் வழங்கப்படுவதில்லை. தலைமை ஆசிரியர்கள் 5-க்கும் மேற்பட்ட முறை சென்று, பொருட்களை சரக்கு வேனில் எடுத்து வர வேண்டியதுள்ளது.ஒரு முறை பொருளை எடுத்து வர, ரூ.800 முதல் ஆயிரம் வரை செலவாகிறது. 500 மாணவர்களை கொண்ட, உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், இதற்காக ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவழிக்கின்றனர். கடந்த ஆண்டு புத்தகங்களை எடுத்து வந்ததற்கு, பள்ளி கல்வி துறை சார்பில் உயர்நிலை பள்ளிக்கு ரூ.1,500, மேல்நிலை பள்ளிக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது.தலைமை ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தை இழந்தனர்.

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும்போது: சத்துணவு பொருட்களை, அந்தந்த பள்ளிக்கு சென்று வழங்குகின்றனர். அதே போன்று, இந்த நலத்திட்ட பொருட்களையும் அந்தந்த பள்ளியிலேயே வழங்க வேண்டும். கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு வேன் வாடகை 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எனவே, பொருட்களை எடுத்து வர செலவான தொகை முழுவதையும் பள்ளிக்கல்வித்துறையே வழங்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment