தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சுற்றுச்சுவர் பாதி கட்டிய நிலையிலும், முழுமையாக இல்லாமலும், இடிந்து விழும் நிலையிலும் உள்ளன.இதனால், பள்ளி வளாகத்தினுள் வெளியாட்கள் நுழைவதும், மாணவர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதும் நடக்கிறது. ஆட்கடத்தல் மற்றும்வனவிலங்குகள் அச்சுறுத்தல் என பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகிறது.
பல்வேறு அரசுப்பள்ளிகளில், ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே செல்கிறது. தனியார் பள்ளிகளை நாடிச்செல்லும் பெற்றோர், அரசுப்பள்ளிகளில் நிலவும் வசதிக் குறைபாடுகளை முக்கிய காரணமாக குறிப்பிடுகின்றனர்.
சேர்க்கையை அதிகரிக்கவும், இடையில் நிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும், ஆசிரியர்களை வீடு வீடாகச்செல்லும்படி வலியுறுத்தும் கல்வித்துறை நிர்வாகம், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான், சமூக விரோத செயல்களில் இருந்து அரசுப்பள்ளிகளையும், அவற்றில் பயிலும் மாணவர்களையும் காப்பாற்ற முடியும்.
No comments:
Post a Comment