தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த மாதத்துக்குள் அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
துரித உணவக சங்கிலி தொடர் அமைப்பான டோமினோ’ஸ் பிசா-வை நடத்தி வரும் ஜுபிலன்ட் ஃபுட்ஒர்க்ஸ் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அருண் ஜேட்லி கூறியதாவது:
"பெரிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் (சிஎஸ்ஆர்) ஒரு அங்கமாக தூய்மை இந்தியா திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக நிதிக் கொள்கையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
சுகாதாரமின்மை மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக ஏற்படும் நோய்களுக்காக அரசு செலவிடும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டம் சுகாதார கேடு ஏற்படுவதைத் தடுப்பதற்கான சிறந்த திட்டம் ஆகும்.
இதன்படி, இந்த மாதத்துக்குள் அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவதுதான் அரசின் முதல் இலக்கு. குறிப்பாக பெண் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் 100 சதவீதம் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தரப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment