ஆய்வக உதவியாளர் பணியிட தேர்வை நாங்கள் நடத்தவில்லை’ தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 10, 2015

ஆய்வக உதவியாளர் பணியிட தேர்வை நாங்கள் நடத்தவில்லை’ தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிக்கை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–பள்ளிக்கல்வித் துறையில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் உள்ளீட்டு எல்லைக்கு உட்பட்டதல்ல.
அப்பதவிகான தேர்வினையோ அல்லது விண்ணப்பப் பரிசீலனையோ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவில்லை.மேற்படி பதவிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளும் வெளிப்படைத் தன்மையுடனே நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அனைத்தும் விரைவாக வெளியிடப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment