ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணி நியமனம் பள்ளிக்கல்விச் செயலாளரிடம், இடைநிலை ஆசிரியர்கள் மனு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 5, 2015

ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணி நியமனம் பள்ளிக்கல்விச் செயலாளரிடம், இடைநிலை ஆசிரியர்கள் மனு

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அலுவலகத்தில், 2013-ம் ஆண்டு ஆசிரியர்தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.சி.ஏ.) சென்னை தலைமைச் செயலகத்தில் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட ஆதிதிராவிட நலப்பள்ளிகளுக்கான669 இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இதுவரை பணிநியமனம் வழங்கப்படவில்லை. ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், இதுவரை ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த விதிகளின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆதிதிராவிட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து. உடனடியாக தேர்வுப்பட்டியலை வெளியிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment