சட்ட கல்லூரியில் சேர இன்று முதல் ( சூன்13 )விண்ணப்பம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 13, 2016

சட்ட கல்லூரியில் சேர இன்று முதல் ( சூன்13 )விண்ணப்பம்

தமிழகத்தில், அம்பேத்கர் சட்டப்பல்கலையின் அங்கீகாரம் பெற்று, ஏழு இடங்களில் அரசு சட்டக் கல்லுாரிகள் செயல்படுகின்றன.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் வேலுார் ஆகிய இடங்களில் உள்ள இந்த கல்லுாரிகளில், ஜூன் 13ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பி.ஏ., - எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புக்கு, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். எல்.எல்.பி., மூன்றாண்டு படிப்புக்கு, பிளஸ் 2 முடித்து, ஏதாவது, ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள், ஏழு சட்டக் கல்லுாரிகளிலும், அம்பேத்கர் சட்ட பல்கலையிலும் நேரடியாக விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஐந்து ஆண்டு படிப்புக்கு, ஜூன் 30; மூன்றாண்டு படிப்புக்கு, ஜூலை, 15 ஆகிய தேதிகளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment