ஆசிரியர் கல்விக்கு புதிய பல்கலை: மத்திய அரசு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 13, 2016

ஆசிரியர் கல்விக்கு புதிய பல்கலை: மத்திய அரசு

வெளிநாடுகளைப் போல் இந்தியாவிலும் ஆசிரியர் கல்விக்கு புதிய பல்கலை., அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை அதிகரிக்கும் நோக்கில், அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய பல்கலையை அமைப்பது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. இதற்காக ஒரு குழுவை மத்திய அரசு தயாரித்துள்ளது. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் ஏதேனும் ஒரு மண்டல நிறுவனத்தை, ஆசிரியர் கல்வி பல்கலையாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment