புதுடெல்லிமத்திய அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்கிறது. இதற்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் வழங்கியது.ஓய்வு வயது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்த விவரங்களை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:–மத்திய அரசின் சுகாதார பணியில் கல்வி கற்பிக்காத டாக்டர்கள், பொது சுகாதார நிபுணர்கள் ஆகியோர் ஓய்வுபெறும் வயது 65 ஆக உயர்கிறது. இதேபோன்று ஜி.டி.எம்.ஓ. என்னும் பொதுப்பணி மருத்துவர்களின் ஓய்வு வயதும் 65 ஆக உயர்த்தப்படுகிறது.இதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கியது.சிறப்பான கவனிப்பு
இந்த முடிவு, நோயாளிகளை சிறப்பான விதத்தில் கவனிக்கவும், மருத்துவ கல்லூரிகளில் கற்பித்தல் செயல்பாடுகள் சரியானவிதத்தில் நடக்கவும் உதவியாக அமையும். அதேபோன்று சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் விதத்தில் தேசிய சுகாதார திட்டங்களை வலுவாக அமல்படுத்தவும் இது உதவும்.நோயாளிகளை தொடர்ந்து கவனிப்பதை உறுதி செய்யும் வகையில், காலி பணியிடங்களில் மருத்துவர்கள் விரைவாக நியமிக்கப்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.3 பிரிவினர்
மத்திய மந்திரிசபை முடிவின்படி, கல்வி கற்பிக்காத டாக்டர்கள், பொது சுகாதார நிபுணர்கள், பொதுப்பணி மருத்துவர்கள் என 3 பிரிவு டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்கிறது.2006–ம் ஆண்டு வரையில் மத்திய அரசு பணியில் டாக்டர்கள் ஓய்வு வயது 60 ஆக இருந்து வந்தது. ஜி.டி.எம்.ஓ. என்னும் பொதுப்பணி மருத்துவர்கள் தவிர்த்து கல்வி கற்பிக்காத டாக்டர்கள், பொது சுகாதார நிபுணர்கள் ஆகியோர் ஓய்வு பெறும் வயது, 2006–ம் ஆண்டு, நவம்பர் 2–ந் தேதி மத்திய மந்திரிசபை அளித்த ஒப்புதலின்பேரில், 60–ல் இருந்து 62 ஆக உயர்த்தப்பட்டது.2008–ம் ஆண்டு, ஜூன் 5–ந் தேதி, கல்வி கற்பிக்கும் பணியில் உள்ள டாக்டர்கள் ஓய்வு பெறும் வயது 62–ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டது. கல்வி கற்பிக்க மூத்த மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால், அப்போது அந்த முடிவு எடுக்கப்பட்டது. இப்போது மத்திய அரசு பணியில் உள்ள எல்லா டாக்டர்களின் ஓய்வு வயதும் 65 ஆக உயர்வது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment