காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ– மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.பள்ளி, கல்லூரி விடுதிகள்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், பள்ளி மாணவர்களுக்காக 13 விடுதிகளும், மாணவிகளுக்காக 7 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்காக 4 விடுதிகளும், மாணவிகளுக்காக 4 விடுதிகளும் என்று மொத்தம் 28 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12–ம் வகுப்பு பயிலும் மாணவ–மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ.க்களில் பயிலும் மாணவ, மாணவிகள் சேர தகுதியுடையவர் ஆவர். இந்த விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்ந்து கொள்ளப்படுவர். இந்த விடுதிகளில் தங்கும் மாணவ– மாணவிகளுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் வழங்கப்படுவதோடு, 10–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ– மாணவிகளுக்கு 2 செட் சீருடையும், 10 மற்றும் 12 –ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும்.ஆண்டு வருமானம்இந்த விடுதியில் சேர விரும்புகிறவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமலும், இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிறுவனத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மட்டும் மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் சேர விரும்பும் மாணவ– மாணவிகள் அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது அருகிலுள்ள பள்ளி, கல்லூரி விடுதிகளின் காப்பாளர்களிடம் இலவசமாக பெற்று கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
பூர்த்தி செய்யப்பட்ட பள்ளி விடுதிகளுக்கான விண்ணப்பங்களை வருகிற 30.6.2016–க்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கான விண்ணப்பங்களை வருகிற 15.7.2016–க்குள்ளும் அவற்றை பெற்ற இடங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும். சாதி சான்றிதழ் மற்றும் பெற்றோரது வருமான சான்றிதழ்களை விடுதியில் சேரும் போது வழங்கினால் போதுமானது. மேலும், முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்காக ஒவ்வொரு விடுதியிலும் 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment