சேவை வரி உயர்வு : அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 1, 2016

சேவை வரி உயர்வு : அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது...

மத்திய அரசு அறிவித்துள்ள 15 சதவீத சேவை வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஓட்டல் சாப்பாடு முதல் மொபைல் போன் ரீசார்ஜ் வரை அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

விவசாய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரை சதவிகித கூடுதல் சேவை வரி விதிக்கப்படும் என்று பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சேவை வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த வரி உயர்வால் மொபைல் போன் ரீசார்ஜ், தியேட்டர்கள், அழகு நிலையங்களில் கட்டணம் உயரும். விமான மற்றும் ரயில் முன்பதிவு கட்டணம், காப்பீட்டு பாலிசி கட்டணம், டிவி டிடிஎச் சேவை, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு, கூரியர், கால் டாக்சி ஆகியவற்றுக்கான கட்டணமும் அதிகரிக்கும்.

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை கடந்த 15 நாட்களில் இரண்டாவது முறையாக நேற்று நள்ளிரவு உயர்த்தி உள்ளன. இந்த விலை உயர்வு உடனடியாகவும் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மானியம் இல்லா சிலிண்டர் விலையை ரூ.21 உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விமானத்திற்கான எரி பொருள் விலையும் 9.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment