தமிழக பள்ளிகள் திறப்பு : பள்ளிகள், மாணவர்களுக்கு ஏராளமான அட்வைஸ்... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 1, 2016

தமிழக பள்ளிகள் திறப்பு : பள்ளிகள், மாணவர்களுக்கு ஏராளமான அட்வைஸ்...

ஒரு மாத கால கோடை விடுமுறைக்கு பின் தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் சில முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளன.

இதுதொடர்பாக, தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் சென்னையில் கடந்த 27ம் தேதி ஆய்வுக்கூட்டம்
நடைபெற்றது. அதன்படி, பள்ளிகள் திறக்கும் நாளன்று மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், பள்ளி வகுப்பறைகளைத் தூய்மையாக வைத்திருப்பதை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளிக் கிணறுகள் உள்ளிட்டவை மூடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும், மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்று ஆய்வு செய்ய வேண்டும், அரசு பள்ளிகளில் மாணவர் இடைநிற்றலை தவிர்க்க ஆலோசனை வழங்க, தலைமை ஆசிரியரை அறிவுறுத்த வேண்டும், தேவைக்கேற்ப அரசு பள்ளிகளில் ஆங்கில வழி இணைப்பிரிவுகளை துவக்கலாம் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பள்ளிகளுக்கு பைக் ஓட்டி வரக்கூடாது, மொபைல் போன் கொண்டு வரக் கூடாது, பஸ்களில் படிகளில் பயணம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இன்றே, மாணவர்களுக்கு அரசின்இலவச பாட புத்தகங்கள், சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஜூன் 6ம் தேதியும், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஜூன் 8ம் தேதியும் திறக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment