மொபைல் போனில் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 6, 2016

மொபைல் போனில் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்

ரயிலில் பயணம் மேற்கொள்ள இணையம், தனியார் ஏஜன்சி, மொபைல் போன் உட்பட பல வழிகளிலான முன்பதிவு வசதியை, ரயில்வே துறை எளிமையாக்கி உள்ளது.
முன்பதிவில்லாத டிக்கெட் பெற வேண்டுமெனில் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டி

உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், கடந்த ரயில்வே பட்ஜெட்டில், முன்பதிவில்லாத டிக்கெட்டை, 'மொபைல் ஆப்' மூலம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது; இதற்கான ஆலோசனை தற்போது துவங்கியுள்ளது.

ரயில்வே உயரதிகாரிகள் கூறுகையில், 'டில்லி, மும்பையில் இதற்கான பரிசோதனை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், 'டாப் -10' நகரங்களில், 'மொபைல் ஆப்' அறிமுகப்படுத்தப்பட்டு, முன்பதிவில்லாத டிக்கெட் பெறும் வசதி

கொண்டு வரப்படும். இதன்பின், பிளாட்பாரம் டிக்கெட், சீசன் டிக்கெட்களும் இத்திட்டத்தில் பெற வசதி செய்யப்படும்' என்றனர்.

No comments:

Post a Comment