குறைதீர்ப்புக் கூட்டத்திலே ஆசிரியர்களின் குறைகளை உடனடியாக தீர்த்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர்!!!
ஆசிரியர்களின் குறைதீர்ப்புக் கூட்டம் தமிழகத்தின் பெரும்பான்மையாக பெயரளவிலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுரையிலும் அவ்வாறே நடைபெற்றுக் கொண்டிருந்தது.ஆனால்
தற்போது தேர்வுநிலை ஊதியத்திற்கான விண்ணப்பம் அளிப்பதற்காக 50க்கும் மேற்பட்ட இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் ,மதுரை கிழக்கு உதவிதொடக்கக்கல்வி அலுவலகம் சென்றிருந்தனர். ஆனால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒருசேர ஒரே இடத்தில். "" ஒரு ருபாய் செலவில்லாமல்"" அனைவருக்கும் *தேர்வுநிலை ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எத்தனையோ ஒன்றியங்களில் ஒரு வருடமாக அலைந்து சென்று பல ஆயிரங்கள் செலவு செய்து தேர்வுநிலை ஆணை பெற்ற காலம் மாறி, மதுரை கிழக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு.ஜான் கென்னடி அலக்ஸாண்டர் P.hd
அவர்கள் ஆசிரியர்களின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
பல ஆண்டுகளாக தேங்கி இருந்த பல ஆயிரகணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பங்களை பதவியேற்ற பின் பனிபோல் விலக்கியுள்ளார்.
அன்னாரின் பணி தமிழகத்தின் அனைத்து உ.தொ.கல்வி அலுவலகங்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்னும் கூடுதலாக முழு ஈடுபாட்டுடன் கல்விப்பணியில் ஈடுபடுவதற்கு பேருதவியாக உள்ளது.
ஆசிரியர்களின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு.ஜான் கென்னடி அலக்ஸாண்டர் P.hd அவர்களை TT News குழு வாழ்த்துகிறது
No comments:
Post a Comment