தனியார் பள்ளிகள் அவரவர் விருப்பம் போல் கட்டணத்தை கட்டச்சொல்லி பெற்றோர்களை வற்புறுத்துவதாக தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்க தலைவர் செ.அருமைநாதன் தலைமைச் செயலகத்தில் இயங்கும் முதல்வர் தனிப்பிரில் ஒரு புகார் மனுவை அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவர் பொறுப்பு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் காலியாக உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான (2016-17) கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, கல்விக்கட்டணம் தெரியாமல் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆகவே, கட்டண நிர்ணயக்குழு தலைவரை விரைவில் நியமிக்க வேண்டும்.
நடப்பு கல்வி ஆண்டுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படாத சூழ்நிலையைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகள் அவரவர் விருப்பம் போல் கட்டணத்தை கட்டச்சொல்லி பெற்றோர்களை வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, கட்டணக்குழு கடைசியாக நிர்ணயம் செய்த கட்டணத்தையே வசூலிக்குமாறு தனியார் பள்ளிகளை அறிவுறுத்த வேண்டும்'' என்று அருமைநாதன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment