விதிமீறல் மதுரையில் 181 பள்ளி வாகனங்களில் ரூ.2 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவு ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 1, 2016

விதிமீறல் மதுரையில் 181 பள்ளி வாகனங்களில் ரூ.2 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவு !

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் குழுவாக இணைந்து கடந்த மே 24ல் ஒரே நாளில் 892 பள்ளி வாகனங்களை சோதனை செய்தனர். 181 வாகனங்களில் விதிமீறல் கண்டறிந்து சோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாகனங்கள் ஆய்வுக்கு (எப்.சி.) வரும்போது ரூ.2 லட்சத்து ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்படும்.

மதுரையில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் 1092 உள்ளன. கலெக்டர் வீரராகவராவ் உத்தரவுப்படி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிங்காரவேல், பாஸ்கரன், கல்யாணகுமார் ஆகியோர் தலைமையில் தடையின்மை சான்று வழங்குவதற்காக கடந்த மே 24ல் ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

விதிமீறல் கண்டுபிடிப்பு

இரண்டு கட்டமாக 892 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் 181 வாகனங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டன. இவ்வாகனங்கள் தகுதி சான்று பெற (எப்.சி.) வரும்போது ரூ.2 லட்சத்து 1,600 அபராதம் வசூலிக்கப்படும். இன்னும் 208 வாகனங்கள் ஆய்வு செய்யப்படாமல் உள்ளன. இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த வாகனங்களை இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்குபின் இயக்கப்படும்.

ரூ.9 லட்சம் வசூலிப்பு

ஜன., முதல் ஏப்., வரையில் வரி பாக்கி வைத்திருந்த 181 வாகனங்கள் மீது ரூ.9 லட்சத்து 76 ஆயிரத்து 172 வசூலிக்கப்பட்டது. தவிர வாகன சோதனையின் போது, விதிமீறல் தொடர்பாக ரூ.7,400 உடனடி அபராதம் வசூலிக்கப்பட்டது. பள்ளி குழந்தைகளை பாதுகாப்புடன் அழைத்து செல்வது குறித்து பஸ், வேன், ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. சிறந்த டிரைவர்களுக்கு இந்தாண்டு சிறப்பு பரிசு, நற்சான்று பத்திரம் வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.i

No comments:

Post a Comment