பத்தாம் வகுப்புக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 6, 2016

பத்தாம் வகுப்புக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்?

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை உள்ள நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு முதுநிலை் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தி வருகின்றனர். மற்ற வகுப்புகளுக்கு இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

இந்த நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு இனிமேல் முதுநிலை பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளை பொறுத்தவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதுடன்,  பதவி உயர்வு மூலமும் பட்டதாரிகளை  நியமிக்கும் வழக்கம் இருந்து வந்தது. அதை மாற்றி பணி நிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளிகளுக்கு நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment