ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக நாளேடுகளில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் ஆனால் உண்மை நிலைமை என்ன.......................
மதிப்புமிகு பள்ளி கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்களிடமும் தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ரெ.இளங்கோவன் அவர்களிடமும் நேரிலும் அலைபேசி வழியாகவும் பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தவும் சென்ற ஆண்டு மாறுதல் பெற்று இன்னமும் விடுவிக்கப் படாமல் உள்ள ஆசிரியர்களை உடன் விடுவிக்கவும்
இயக்குநர்கள் அளவில் இன்னமும் மாறுதல் பொது விதிகள் தொடர்பாக கருத்து தொகுப்புகள் எதுவும் பள்ளி கல்வி துறை முதன்மைச் செயலாளருக்கு பரிந்துரைக்க வில்லை விரைவில் அனுப்ப உள்ளோம் என்று கூறியுள்ளார்கள்.
மாறுதல் விதிகளில் கடைபிடிக்க வேண்டி நாம் கேட்டுக்கொண்டவைகள்....
31.05.2016 வரையில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக மாறுதல் கலந்தாய்வு தேதியில் ஓராண்டு பணி முடித்திருந்தால் விண்ணப்பத்தாரருக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளோம்.
ஓராண்டு பணி முடிக்காமல் விதி தளர்வு தரும் நிகழ்வுகளில் (priority) தவிர்க்கப்பட வேண்டியவற்றை பரிசீலித்தும் கால நீட்டிப்பு தர வேண்டியவை தொடர்பாக கலந்து பேசியும் நீண்ட காலம் மாறுதல் வாய்ப்பே இல்லாமல் காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.
இயக்குநர்களின் பரிந்துரைக்குப் பின் பள்ளி கல்வி துறை முதன்மைச் செய்லாளர் விதிகளை பரிசீலிப்பார்.பின் பள்ளி கல்வி துறை அமைச்சர் பார்வைக்குச் செல்லும் அதற்கு பின்னர்தான் மாறுதல் விதிகள் வெளிவரும். மாறுதல் விதிகள் வெளிவந்தபின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் தொடர்பாக விவரம் தெரிவிப்பார்கள். வழக்கம்போல ஜூலை மாதம் முதல் வாரத்தில்தான் பொது மாறுதல் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை தகவலுக்காக தெரிவித்துக் கொள்கின்றோம்.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வினை ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக நடத்திட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளோம் என்பதை தகவலுக்காக தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி: சிவக்குமார்
No comments:
Post a Comment