டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல் நிரப்பினால் 0.75% கழிவு அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
ரொக்கமற்ற பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள சலுகை அறிவிப்புகள் வருமாறு:
>> டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மாதாந்திர புறநகர் சீசன் ரயில் டிக்கெடுகள் எடுத்தால் ஜனவரி 1ம் தேதி முதல் 0.5% தள்ளுபடி.
>> ரயில்வே உணவகங்கள், தங்குமிடம், ஆகியவற்றில் மின்னணு பரிவர்த்தனைக்கு 5% தள்ளுபடி.
>> பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் இணையதளங்களிலிருந்து பொது மற்றும் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பவர்களுக்கு பிரிமியம் தொகையில் 10% தள்ளுபடி
>> 10,000த்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு 2 பிஓஎஸ் மெஷின்கள் வழங்கப்படும், ஒரு லட்சம் கிராமங்கள் இவ்வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
>> தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 10% தள்ளுபடி.
>> சிறுவணிகர்களை மின்னணு பரிவர்த்தனை முறைக்குக் கொண்டு வரும் வகையில் பிஓஎஸ் முனையங்கள்/ மைக்ரோ ஏடிஎம்கள்/ மொபைல் பிஓஎஸ் ஆகியவற்றிற்கு ரூ.100க்கும் மேல் மாதவாடகை செலுத்தத் தேவையில்லாதவாறு பொதுத்துறை வங்கிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
>> ஆன்லைன் டிக்கெட்டுகள் வாங்கும் அனைத்து ரயில்வே பயணிகளுக்கும் ரூ.10 லட்சம் வரையில் இலவச விபத்துக் காப்பீடு.
>> நாபார்டு மூலம் கிராமப்புற பிராந்திய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் 4.32 கோடி பேர்களுக்கு ரூபே கிசான் அட்டைகளை வழங்க மத்திய அரசு ஆதரவளிக்கிறது, எனவே இவர்களும் ரொக்கமற்ற மின்னணு பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment