சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பில் பொதுத்தேர்வு கட்டாயம்; நிர்வாகக் குழு பரிந்துரை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 21, 2016

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பில் பொதுத்தேர்வு கட்டாயம்; நிர்வாகக் குழு பரிந்துரை

சி.பி.எஸ்.இ., நிர்வாகக் குழு அளித்த பரிந்துரையை அரசு ஏற்கும் பட்சத்தில், வரும் 2018ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்பட உள்ளது.


சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தற்போது உள்ள நடைமுறைப்படி, சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பொதுத் தேர்வு எழுதலாம் அல்லது பள்ளியில் நடத்தப்படும் தேர்வை எழுதலாம். இந்நிலையில் சி.பி.எஸ்.இ., பாடதிட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வை கட்டாயமாக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ., நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் வரும் 2018ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்படும். 


பரிந்துரை :


அரசின் கையில் முடிவு :


தற்போது 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மூன்று மொழிகள் பயிற்றுவிக்கும் முறை உள்ளது. இதனை பத்தாம் வகுப்பு வரை நீட்டிக்கப்படவேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது. இதன்படி இந்தி, ஆங்கிலம், மற்றும் ஒரு இந்திய மொழியும் கற்பிக்கப்படவேண்டும் என்றும் வெளிநாட்டு மொழிகள் 4வது மொழியாக விருப்பப் பாடமாக சேர்க்கப்படலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் குறித்த இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment