ரெயில் பயணிகள் 139–க்கு டயல் செய்து வாடகை கார், சக்கர நாற்காலி வசதி பெறலாம் ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 3, 2016

ரெயில் பயணிகள் 139–க்கு டயல் செய்து வாடகை கார், சக்கர நாற்காலி வசதி பெறலாம் ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு!!!

ரெயில் பயணிகள் வசதிக்காக ஐ.ஆர்.சி.டி.சி. 2007–ம் ஆண்டு 139 என்ற எண்ணை அறிமுகம் செய்தது. இதில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளில் பேசும் வசதி உள்ளது. தொடக்கத்தில் இந்த எண் ரெயில் பற்றிய விசாரணை, இருக்கை வசதி

உள்ளிட்ட தகவல்களை பெற உதவியது. அதை தொடர்ந்து உணவுக்கு முன்பதிவு, டிக்கெட்டை ரத்து செய்வது, ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு பணத்தை திரும்ப பெறுவது உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன.தற்போது 139–க்கு டயல் செய்து வாடகை கார், சக்கர நாற்காலி, சுமை தூக்கும் தொழிலாளி உள்ளிட்ட வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. தலைவர் மனோச்சா கூறுகையில், மூத்த குடிமக்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் சக்கர நாற்காலிக்கு முன்கூட்டியே பதிவு செய்தால் இலவசமாக இந்த சேவை அளிக்கப்படும். பயணிகளின் பாதுகாப்புக்காக வாடகை கார் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வசதி தற்போது இந்தியாவில் உள்ள சில முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டும் செய்யப்பட்டு உள்ளது என்றார்.

No comments:

Post a Comment