வங்க கடலில் உருவான வார்தா புயல் கடந்த 12-ந்தேதி கரையை கடந்த போது சூறாவளி காற்று கடுமையாக வீசியதால் பலத்த
சேதம் ஏற்பட்டது.
இந்த புயல் படிப்படியாக வலு இழந்து லட்சத்தீவு பகுதிக்கு சென்று விட்டது.
இந்த நிலையில் வங்க கடலில் மியான்மர் நாட்டின் தெனசெரீம் கடற்கரை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது.
இதுபற்றி வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
வங்க கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை வெகு தூரத்தில் உருவாகி இருக்கிறது.
இது நகர்ந்து வருவதை பொறுத்து மழை இருக்கும். அனேகமாக 20, 21-ந் தேதிகளில் மிதமான மழை பெய்யும் என தெரிகிறது. ஆனால் புயல் வருவதற்கு வாய்ப்பு இல்லை. மக்கள் பயப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment