வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்பு..! மறுப்பு தெரிவித்துள்ள அரசு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 20, 2016

வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்பு..! மறுப்பு தெரிவித்துள்ள அரசு.

உத்திர பிரதேச மாநிலத்தின் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பை மாற்றுவதற்கான
அறிவிப்பை வெளியிடும். எதிர்க்கட்சியினர் நரேந்திர மோடியின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து வரும் நிலையில் வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்புள்ளதாக இந்தியா டூடே சேனல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எப்போது அறிவிக்கப்படும்
உத்திர பிரதேச மாநிலத்தின் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பை மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி உச்சவரம்பு எப்படி இருக்கலாம்?
இந்திய டூடேவின் அறிக்கை படி 4 முதல் 10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வரியும், 10 லட்சம் வரியும், 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 15 சதவீத வரியும், 15 முதல் 20 லட்சம் வரை வருமான உள்ளவர்கள் 20 சதவீத வரியும், 20 லட்சத்திற்கும் அத்திக்காக்க சம்பளம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டி வரும் என்று கூறப்படுகின்றது. இந்த புதிய வரி உச்சவரம்பு அமல்படுத்தப்பட்டால் வரி செலுத்துனர்கள் பெரிதும் பயனடைவர்.
   
Income Tax Slabs      
Income Tax Slabs
நடப்பு வருமான வரி உச்சவரம்புபுதிய வருமான வரி உச்சவரம்பு
Slab (Rs. Lakh)Tax Rate (%)Slab (Rs. Lakh)Tax Rate (%)
0-2.5No Tax0-4No Tax
2.5-5104-1010
5-102010-1515
10 +3015-2020
20+30


நடப்பு வருமான வரி உச்சவரம்பு எப்படி உள்ளது?
இப்போது 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீத வரியும், 5,00,001 ரூபாய் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீத வரியும், 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளவர்கள் 30 சதவீத வரியும் செலுத்த வேண்டும்.
மறுப்பு தெரிவித்துள்ள அரசு
இது குறித்து அரசு தரப்பு செய்தி தொடர்பாளர் ஃபிராங்க் நோரோன்ஹாவை கேட்ட பொழுது இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதே நேரம் ஏஎன்ஐ இது வதந்தி ஆரமற்ற செய்தி என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அருண் ஜேட்லி
டிசம்பர் 14-ம் தேதி மத்திய அமைச்சர் அருண் கேட்லி 2018 ஆண்டு பட்ஜெட்டில் பொது மக்களின் நேரடி வரி மற்றும் மறைமுக வரி இரண்டும் குறைக்க வாய்ப்புள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நேரடி வரி மற்றும் மறைமுக வரி
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லது என்று அறிவித்ததை அடுத்து மறைமுக வரியை விட நேரடி வரி அதிகரித்து உள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவிக்கின்றனர்.
அதே நேரம் மறைமுக வரி 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




No comments:

Post a Comment