நடைமுறையில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக கடந்த மாதம் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. எனினும், டிசம்பர் 30-ம் தேதிவரை வங்கிகளில் பழைய பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்ற சலுகையும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல், ரெயில், விமான கட்டணம், சமையல் எரிவாயு, பெட்ரோல் பங்குகள், அரசுசார்ந்த மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்துவரி கட்டணம் செலுத்துதல், சுங்கக் கட்டணம் ஆகியவற்றுக்காக பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. நாளடைவில் இனி மேற்கண்ட வகையில் பழைய நோட்டுகளை பயன்படுத்துவதற்கான காலக்கெடு கடந்த 30-ம் தேதியுடன் முடிவடைவதாக அறிவிப்பு வெளியானது.
இருப்பினும், மருந்து கடைகள், செல்போன் ரீசார்ஜ் ஆகியவற்றுக்காக வரும் 31-ம் தேதிவரை 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்று கெடு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மருந்து கடைகள் மற்றும் அரசுசார்ந்த மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்துவரி கட்டணம் செலுத்த பழைய 500 ரூபாயை பயன்படுத்தும் காலக்கெடு நாளை (15-ம் தேதி) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைவதாக மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment