ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை: அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 16, 2016

ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை: அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்

மதுரை மாவட்டம் மேலுார் அருகே சொக்கம்பட்டியில் தமிழரசி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர் சிவக்குமார். ஆண்டுதோறும் ஜனவரியில் மத்திய அரசு நடத்தும் தேசிய திறனாய்வு தேர்வில், தனது பள்ளி மாணவர்களை கட்டாயம் பங்கேற்க வைத்து கல்வி உதவித்தொகை பெற்று தருகிறார்.

அவர் கூறியதாவது:- வகுப்பு நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் மாணவர்களின் மனத்திறனை கண்டறிந்து உணவுடன் கூடிய பாடம் நடத்துவதால் மாவட்ட அளவில் சாதனை புரிந்து வருகிறோம். அதனால் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை கிடைக்கிறது. கல்வி கற்க வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதே எனது நோக்கம். தவிர படிக்கும் காலத்திலே மாணவன் தனது படிப்பு செலவை தானே சமாளிக்கும் தன்னம்பிக்கையை உண்டு பண்ண முடிகிறது, என்றார்.
பள்ளியை விட்டு மாணவர்கள் வெளியேறினாலும், அவர்களை தொடர்ந்து கண்காணித்து மேல் படிப்பு மற்றும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறார் சிவக்குமார். இவரை வாழ்த்த: 98430 45210.

No comments:

Post a Comment