பள்ளிகளில் விளையாட்டு மைதானம் கட்டாயம்.. மத்திய அரசு திட்டவட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 1, 2016

பள்ளிகளில் விளையாட்டு மைதானம் கட்டாயம்.. மத்திய அரசு திட்டவட்டம்

பள்ளிகளில் விளையாட்டு மைதானமும், உடற்கல்வி ஆசிரியரும் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையின் கேள்வி நேரத்தில் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் இதனைத் தெரிவித்தார். கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளிகளில் விளையாட்டு மைதானமும், உடற்கல்வி ஆசிரியரும் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

என்று கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சிபிஎஸ்சி அமைப்பு இதற்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில்,‌ மாநில அரசுகளின் கல்வி வாரியங்களும் இதை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்ப்பதாக விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment