500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து மக்களின் கவனம் மின்னணு பண பரிவர்த்தனைகளின் பக்கம் திரும்பியுள்ளது. மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மின்னணு முறையில் சம்பளத்தை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
தொழிலாளர்களின் சம்பளத்தை செக், ஆன்லைன் முறையில் வழங்க அவசர சட்டம் வகை செய்கிறது. அவசர சட்டத்தின்படி தொழிலாளர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்கக் கூடாது என்றும், தொழில் நிறுவன ஊழியர்களுக்கு மின்னணு முறையில் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொழிலாளர்கள் பணமாக சம்பளத்தை வாங்கும் வரையில் பண பரிவர்த்தனைகளை ஒழிக்க முடியாது என மத்திய அரசு கருதுகிறது.இதனால் இந்த அவரச சட்டம் இயற்றப்பட்டதாகவும், பணமில்லா இந்தியாவை உருவாக்க தனியார் நிறுவனங்களும் இந்த திட்டத்தில் இணைய வேண்டுமென மத்திய அரசு கருதுவதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment