புதுடெல்லிபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் பெரும்பகுதி, உயர்மதிப்பு
திருப்பித்தரும் எம்.பி.
இப்படி பாராளுமன்றம் எப்போதெல்லாம் முடங்குகிறதோ அப்போதெல்லாம் ஒரு எம்.பி., தனது சம்பளத்தின் குறிப்பிட்ட பகுதியை திரும்பத்தருவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது இப்போது தெரியவந்துள்ளது.அந்த எம்.பி., பைஜெயந்த் ஜே பாண்டா (வயது 52) ஆவார். ஒடிமா மாநிலத்தை சேர்ந்த இவர், அங்கு ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சியை சேர்ந்தவர். அங்குள்ள கேந்திரபாரா தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மனசாட்சி
பாராளுமன்றம் முடங்கிப்போவதால் தனது சம்பளத்தின் ஒரு பகுதியை அவர் அரசாங்கத்துக்கு திருப்பி தருவது பற்றி கூறுகையில், ‘‘இதை நான் பல ஆண்டுகளாக செய்து வருகிறேன். அமளி காரணமாக பாராளுமன்றம் எவ்வளவு நேரம் முடங்குகிறதோ, அதற்கு ஏற்ப எனது சம்பளத்தின் ஒரு பகுதியையும், தினசரி படியையும் திரும்ப செலுத்தி வருகிறேன்’’ என்று குறிப்பிட்டார்.அதே நேரத்தில் நாட்டின் பெரும்பணம் வீணாவதில், தான் இப்படி திருப்பி செலுத்துவது ஒரு பொருட்டே அல்ல என்றும் அவர் கூறினார்.இதுபற்றி அவர் குறிப்பிடும்போது, ‘‘பாராளுமன்றத்தில் அமளியின் காரணமாக நாடு பெரும்தொகையை இழந்து வருகிறது. எனவே இதை வெளிப்படுத்துகிற வகையில்தான் நான் என் சம்பளத்தின் ஒரு பகுதியை திரும்பத்தருவதை வழக்கமாக கொண்டுள்ளேன். ஏனென்றால் எனக்கு மனசாட்சி இருக்கிறது. நாம் எவ்வளவோ சலுகைகளை பெறுகிறோம். ஆனால் நாம் செய்ய வேண்டிய வேலையை செய்வதில்லை என்பது உறுத்துகிறது’’ என்றார்.
அமளி செய்ததே இல்லை
‘‘கடந்த 16 ஆண்டுகளில் நான் ஒருபோதும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதே இல்லை’’ என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.இவர் 2000–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை மேல்–சபை உறுப்பினராகவும், அதன்பின்னர் தொடர்ந்து பாராளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment