ராமநாதபுரம் பள்ளி மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 19, 2016

ராமநாதபுரம் பள்ளி மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது

ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்று இளம் விஞ்ஞானி
விருது பெற்றனர்.
ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் எம்.சந்தோஷ்குமார், பி.அமிர்த வர்ஷினி, எஸ்.முகமது முபாரக், எம்.ஹரிபிரசன்னா, ஜி.மணிபாரதி ஆகியோர் கோவையில் நடந்த மாநில அளவிலான 24-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்றனர். இவர்கள் கடற்பாசியிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பது தொடர்பான ஆய்வை இம் மாநாட்டில் சமர்ப்பித்தனர். மாநாட்டில் 254 ஆய்வுகளில் 30 ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இளம் விஞ்ஞானிகள் விருது வழங்கப்பட்டது. 30 ஆய்வுகளில் ஒன்றாக வேலுமாணிக்கம் பள்ளி மாணவர்களின் ஆய்வும் இடம்பெற்றது.
தேர்வுபெற்ற வேலுமாணிக்கம் பள்ளி மாணவர்களில் எம்.சந்தோஷ்குமார், தேசிய அறிவியல் இயக்கம் சார்பில் மகாராஷ்டிர மாநிலத்தில் நடக்க இருக்கும் தேசிய மாநாட்டில் இந்த ஆய்வை சமர்ப்பிக்க உள்ளார்.
அதேபோன்று, திருப்பதியில் நடக்கவிருக்கும் இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் மாணவி பி.அமிர்தவர்ஷினி பங்கேற்க உள்ளார்.
இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர்கள், வழிகாட்டி அறிவியல் ஆசிரியர் ஆ.பாலகிருஷ்ணன் ஆகியோரை பள்ளி தாளாளர் வி.மனோகரன், பள்ளி முதல்வர் பரிமளா டி ஆண்டனி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment