உங்கள் வங்கியில் NET BANKING மற்றும் MOBILE BANKING வசதி கேட்டு விண்ணப்பியுங்கள். வசதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவலுடன் PASSWORDம் தருவார்கள்.
உங்கள் வங்கியின் வலைத்தளத்தினுள் சென்று அவர்கள் தரும் CUSTOMER ID கொடுத்து
PASSWORDஐ உள்ளீடு செய்து உள் நுழையுங்கள், முதல் வேலையாக நமக்கு நினைவில் நிற்கும் வகையில் PASSWORDஐ மாற்றிக் கொள்ளுங்கள்
மற்றவர்களுக்கு பணம் அனுப்ப……….
நீங்கள் பணம் அனுப்ப வேண்டியவரை ADD BENEFICIARY பகுதியில் அவர்களின் விபரங்களை கேட்கப்படும் தகவல் பகுதியில் உள்ளீடு செய்யுங்கள் உள்ளீடு செய்து உறுதி செய்த பின் உங்கள் MOBILEக்கு உறுதி செய்த தகவல் அனுப்பப்படும்
இதிலிருந்து 30 நிமிடங்கள் கழித்து முதல் முறையாக பணம் அனுப்ப முடியும்……….. அதே வங்கி என்றால் 30 நிமிடங்களிலும் மற்ற வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 4 மணி நேரத்திலும் அனுப்பலாம்…………
ஒவ்வொரு முறையும் உங்கள் அனுமதி பெற்ற பின்பே பணம் அனுப்ப முடியும்……..உங்கள் MOBILEக்கு உறுதி செய்யும் பொருட்டு ஒவ்வொரு பயன்பாட்டின் போதும் ஒரு முறை மட்டுமே உபயோகிக்க இயலும் PASSWORD அனுப்பபடும் இதன் ஆயுட்காலம் சிறிது நொடிகள் மட்டுமே
RTGS…………...ரூ 2 லட்சத்திற்கு மேல் அனுப்ப………….
NEFT………….ரூ 2 லட்சத்திற்குக் கீழ் அனுப்ப………
IMPS……….….உடனடியாக அனுப்ப……………
இந்த நடைமுறைகள் வங்கிக்கு வங்கி சிறிது மாறுபடலாம்……..
No comments:
Post a Comment