உங்கள் வீட்டில் மின்தடை எப்போது? : 10 நாட்களுக்கு முன் தெரியும் வசதி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 11, 2017

உங்கள் வீட்டில் மின்தடை எப்போது? : 10 நாட்களுக்கு முன் தெரியும் வசதி

பராமரிப்பு பணி மின் தடை
விபரத்தை, 10 நாட்களுக்கு முன்பே, தெரிந்து கொள்ளும் வசதியை, மின் வாரியம் துவக்கி உள்ளது. துணை மின் நிலையம், மின் வழித்தடங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, மின் வாரியம், குறிப்பிட்ட இடைவெளியில், அவற்றில் பராமரிப்பு பணி செய்கிறது.
பராமரிப்பு பணி :

இதற்காக, அந்த பணி நடக்கும் இடங்களில், காலை, 9:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும். அந்த விபரத்தை, மின் வாரியம், பத்திரிகைகள் மூலம், மக்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கிறது. தற்போது, தமிழகம் முழுவதும் பராமரிப்பு மின் தடை செய்யும் பகுதிகளை, 10 நாட்களுக்கு முன் தெரிந்து கொள்ளும் வசதியை, மின் வாரியம் துவக்கியது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், தினமும், பல இடங்களில் உள்ள மின் சாதனங்களில் பராமரிப்பு பணி நடக்கிறது. சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் வசிப்போருக்கு மட்டும், அந்த விபரம் தெரிகிறது; மற்ற நகரங்களில் வசிப்போருக்கு தெரிவதில்லை.

இணையதளம்: தற்போது, 10 நாட்களுக்கு முன், பராமரிப்பு நடக்கும் துணை மின் நிலையங்கள்; அவற்றில் மேற்கொள்ளப்படும் பணிகள் போன்ற விபரங்கள், மின் வாரிய இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டு உள்ளன. அனைவரும், அதை பார்த்து, அதற்கேற்ப தங்கள் பணிகளை திட்டமிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment